விவசாயம் போச்சே பாடல் வரிகள் | The Casteless Collective former’s Songs Lyrics | Cauvery
- ஏலே ஏலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
- விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
- என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
- நான் மண்ணகிண்டும் பொழப்பு இப்போ
- மலையேறி போச்சே
- சோறு கொடுத்த தேசம்
- இப்போ சுடுகாடாச்சே…
- இது மாற பசி ஆற
- கொண்டாடுவோம் ஓ ஓ ஓ….
- விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
- விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
- நாங்க விவசாயத்தை உடமாட்டோம்
- எங்க உயிரே போனாலும்
- எங்க நியாத்தத்தான் நாங்க கேட்டோம்
- இது இல்லடா வியாபாரம்.
- நாங்க விவசாயத்தை உடமாட்டோம்
- எங்க உயிரே போனாலும்
- எங்க நாயத்தைத்தான் நாங்க கேட்டோம்
- இது இல்லடா வியாபாரம்….
- விவசாயம் விவசாயம் விவசாயம்
- பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
- விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
- ஆ.. விவசாயம் பண்ணக்கூட ஒரு சொட்டு தண்ணீ இல்ல
- பட்டினியா கிடக்கிறோம் கூலி வேல ஒன்னும் இல்ல…..
- மண்ணுல மழையும் இல்ல விண்ணுல விதையும் இல்ல
- கண்ணீர தொடைக்க கூட காவேரி நதியும் இல்ல…
- சொந்தமான நிலமும் இல்ல கேட்கலானா உரிமையில்ல
- கூலிவேல விவசாயிய பத்தி யாருக்குமே கவலையில்ல…
- ரத்த வேர்வ சிந்தி உழைக்கிறோம் அந்த உச்சி வெயிலில
- நாங்க வெதச்ச பயிர காப்பாத்தவும் வேற வழியில்ல
- பயிர் வாடிப்போயி இருக்குது இந்த வறண்ட பூமில
- இது வானம் பாத்த பூமி தான் எப்ப மாறும் வானில…
- விவசாயம் விவசாயம் விவசாயம்
- பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
- விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
- தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
- தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
- ஆ நிலத்துல உழைக்கிறான் தினக்கூலி விவசாயி
- பணத்த தான் மதிக்கிறான் பணக்கார முதலாளி…
- தள்ளுபடி செய்யுறண்டா பணக்காரன் கடன
- விவசாயியை தள்ளுறாண்டா ஜெயிலுக்குள்ள உடனே…
- நஞ்ச நிலத்துலதான் ஓலைக்குறவன் எல்லாம் கடனாளி
- பஞ்ச பணமாக மாத்துறவன் இன்னைக்கு முதலாளி
- அட இன்னும்கூட கிடைக்கல நாங்க கேட்ட மானியம்
- அதனால தாண்டா விதைக்கள சம்பு சோள தானியம்…
- விவசாயம் விவசாயம் விவசாயம்
- பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
- விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
- தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
- தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…