You Are Here: Home » வாகனங்கள் » ஹீரோ ஸ்ப்ளெண்டர் iSmart

ஹீரோ ஸ்ப்ளெண்டர் iSmart

பெயரில் புது பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹீரோ. வாடிக்கையாளர் அவர் பார்வையில் தங்களது அனுபவம் சொல்கின்றனர்.Hero Splendor iSmart

பிடித்தது

இந்தியாவில் அதிகம் விற்கும் பைக்கான ஸ்ப்ளெண்டரில், சில நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி ‘ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட்’ என்றஇதில் ட்ரிப் மீட்டர் இருப்பதால், எவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடலாம். கூடுதல் மைலேஜ் அளிப்பதற்காகவே சேர்க்கப்பட்டுள்ள ஐ-3எஸ் தொழில்நுட்பம், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என பட்ஜெட் பைக்கில் பல வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. இளைஞர்கள் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் பயன்படுத்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் பயணித்தாலும் பயணக் களைப்பு இல்லை. தேனி பகுதியில் உள்ள மலைச் சாலை, மேடு பள்ளங்கள் என எல்லாப் பக்கங்களும் பயணம் செய்துவிட்டேன். நான் எதிர்பார்த்தைவிட சிறப்பாகவே பயண அனுபவம் இருக்கிறது. லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜ் தருகிறது. ட்யூப்லெஸ் டயர், மாடர்ன் கிராஃபிக்ஸ், பெரிய ஃபுட் ரெஸ்ட், ஐடியல் ஸ்டாப்/ஸ்டார்ட் என சிறப்புப் பட்டியல் நீளம். ஐ-ஸ்மார்ட் பார்ப்பதற்கு ஸ்ப்ளெண்டர் என்எக்ஸ்ஜி பைக்போல இருந்தாலும் அதை மறைப்பதுபோல, வெரைட்டியான லைட் கலர்களில் ஐ-ஸ்மார்ட் அழகாக இருக்கிறது.
ஐ-ஸ்மார்ட் ஓட்டும்போது மிக ஸ்மூத்தாக உணரவைக்கிறது. பொதுவாக, நான் நாள் முழுவதும் பைக்கிலேயே சுற்றிக்கொண்டிருப்பதால், எனக்கு முதுகு வலி வரும். இந்த பைக் பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து முதுகு வலியே இல்லை. நகருக்குள் எனக்கு லிட்டருக்கு 65 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. புறநகர் என்றால், 70 கி.மீ வரை போகிறது. இந்த பைக்கில் என்னை வெகுவாக ஈர்த்தது, நியூட்ரல் ஆப்ஷன்தான். பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு 30 விநாடிகள் வரை பைக்கை நகர்த்தாமல் இருந்தால், அப்படியே ஆஃப் ஆகிவிடும். பிறகு, ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிளட்ச்சை அழுத்தினாலே, அதுவாகவே ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இதனால், பெருமளவு பெட்ரோல் மிச்சம் ஆகிறது. ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கின் தோற்றம், ‘இது 100 சிசி பைக்கா?’ என்று ஆச்சரியம் கொள்ளவைக்கிறது. மீட்டர் கன்ஸோல் கவரும் வண்ணம், கவர்ச்சியாக வடிவமைத்திருக்கிறார்கள். இன்ஜின் கவர் டிஸைன் அருமை.

பிடிக்காதது

பைக்கின் கலர் ஆப்ஷனில் சிவப்பு, நீலம் ஓகே. ஆனால் இளம்பச்சை, கறுப்பு வண்ணங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். பைக்கின் டேங்க் மிக மெல்லிதாக இருப்பதுபோல இருக்கிறது. டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது பெரிய குறைதான். ஹெட் லைட்டை பேட்டரியுடன் நேரடியாக இணைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஹெட்லைட் வெளிச்சம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும், பில்லியனில் உட்காரும்போதும், இறங்கும்போதும் ஸ்பிளிட் கிராப் ரெயிலில் உடைகள் சிக்கிக் கிழியும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதேபோல், காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்த பிறகு, இன்ஜின் சூடேறும் வரை பிக்-அப் குறைவாக இருக்கிறது. சூடேறியதும்தான் அசல் முகத்தைக் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை பட்ஜெட் பைக்கில் பெட்டர் பைக், ஐ-ஸ்மார்ட்.
பைக்கின் கிராப் ரெயிலை, மற்ற பைக்குகளைப்போல சிங்கிளாக அமைத்திருக்கலாம். ஸ்பிளிட் செய்திருப்பதால், பில்லியனில் உட்காரும் போதும், இறங்கும்போதும் இடையூறாக இருக்கிறது. பேட்டரி, பெட்ரோல் குறையும் சமயத்தில் நினைவூட்ட இண்டிகேட்டர்கள் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி, ஸ்டைல் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஸ்டைலில் இன்னும் மாற்றங்கள் செய்திருக்கலாம். ஆனாலும் குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்கள், மைலேஜ் என நிறைவைத் தருகிறது ஐ-ஸ்மார்ட்

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top