கோக் நிறுவனத்தின் வாரனாசி தொழிற்சாலைக்கு தடை | Coke’s ban on Varanasi factory

Coke’s ban on Varanasi factory: உத்திர பிரதேசம் வாரணாசியில் இயங்கி வரும் கோக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இதே போன்ற தடை இதற்கு முன்னர் கேரளாவில் உள்ள தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

cocacola

வாரனாசியில் உள்ள ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் ஒற்றை வரிசை தயாரிப்பு முறையில் கோக் குளிர்பானங்களை தயாரித்து வருகிறது.

கடந்த ஜூன் 6ம் தேதி கூறியுள்ள அறிக்கையின் படி கோக் நிறுவனம் உத்திர பிரதேசத்தின் மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்திடம் அனுமதியின்றி ஒரு நாளைக்கு 20,000 கேஸ்களை தயாரிப்பதற்கு பதில் 36,000 கேஸ்களை தயாரிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும் என்பதால் கோக் நிறுவனத்தின் வாரணாசி ஆலைக்கு தடை உத்திரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது.

இயற்கை விதிமுறைமீறல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புகார்களின் கீழ் கோக கோலா நிறுவனத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

About the author

admin

Leave a Comment