செய்திகள்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடிக்கும் அதிகம்

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் (Indians money in Swiss banks) ரூ.14,000 கோடிகளுக்கு அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கித் தரவுகள் தெரிவித்துள்ளது.

indian-rupees

2013 ஆம் ஆண்டின்போது சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் சுமார் 40% அதிகரித்துள்ளது. மாறாக சுவிஸ் வங்கியில் மற்ற நாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் தொகை இதே காலக் கட்டத்தில் சுமார் 90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதாக அந்தத் தரவுகள் தெரிவித்துள்ளன.

2012ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை பெருமளவு குறைந்தது.

சுவிஸ் வங்கியில் நேரடியாக இந்தியர்கள் வைத்திருக்கும் தொகையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரது 1.95 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் தொகையும் அடங்கும். மேலும் சொத்து நிர்வாகிகள் மூலம் வங்கியில் வைத்திருக்கும் தொகை 2013ஆம் ஆண்டு முடிவு நிலவரங்களின் படி 77.3 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வங்கி தனது அயல்நாட்டு வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ரகசிய கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்று இந்தியாவும் பிற நாடுகளும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இந்தத் தரவுகளை சுவிஸ் தேசிய வங்கி அளித்துள்ளது.

சுவிஸ் வங்கி “பொறுப்புகள்” அல்லது வாடிக்கையாளர்களுக்கு ‘செலுத்த வேண்டிய தொகை’ என்று குறிப்பிட்டுள்ள இந்தத் தொகையில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்படும் கறுப்புப் பணம் கணக்கில் வராது என்று தெரிகிறது.

மேலும் சுவிஸ் வங்கியில் அயல்நாட்டிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அடங்காது என்றும் கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் இயங்கிய வங்கிகளின் எண்ணிக்கை 300. இது தற்போது 283ஆகக் குறைந்துள்ளது. காரணம் வங்கிகள் அயல்நாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து உள்நாட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியதே என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the author

admin

Leave a Comment