செய்திகள்

1.20 லட்சம் தமிழக காவலர்களுக்கு இலவச சிம்கார்டு!

தமிழகத்தில் 1.20 லட்சம் காவலர்களுக்கு (Tamil Nadu Police) தமிழக அரசு சார்பில் இலவச சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்த உள்ளது.

J-Jayalalithaa

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் உள்ளனர். இவர்கள் சியூஜி சிஸ்டம் மூலம் இலவசமாக செல்போனில் பேச வசதியாக, பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் சிம்கார்டு வழங்க தமிழக அரசு ரூ.3 கோடியே 28 லட்சம் ஒதுக்கியது. இதன்படி தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு சிம்கார்டு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் முதல் அமைச்சு பணியாளர்கள் வரை அனைவரும் செல்போன் மூலம் இலவசமாக பேசும்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.264. இதனை அரசே செலுத்தி விடும்.

பிஎஸ்என்எல் சிம் மூலம் சியூஜி தவிர்த்த மற்ற பிஎஸ்என்எல் எண்களுக்கு பேசுவதற்கு நிமிடத்திற்கு 10 காசும், மற்ற நிறுவன செல்போன் எண்களுடன் பேச நிமிடத்திற்கு 30 காசும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் வைத்திருப்பவர்களும் இந்த சியுஜி சிஸ்டத்தில் இணைக்கப்படுவர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் செல்போன் தொடர்பு வளையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

About the author

admin

Leave a Comment