சைவம்

Carrot Lemon Rice Recipe In Tamil | கேரட் எலுமிச்சை சாதம்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கேரட் எலுமிச்சை சாதம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தேவையான பொருட்கள்:

* பாஸ்மதி அரிசி – 1 கப்

* எலுமிச்சை சாறு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)

* கேரட் – 1 (துருவியது)

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், முந்திரி மற்றும் வேர்க்கடலையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

* அதன் பின் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

* பிறகு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளற வேண்டும்.

* அதன் பின் வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.

Image Courtesy: naliniscooking

இந்த பதிவின் மூலமாக கேரட் எலுமிச்சை சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கேரட் எலுமிச்சை சாதம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment