சைவம்

Chettinad Vegetable Kurma Recipe In Tamil | செட்டிநாடு வெஜிடேபிள் குருமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு வெஜிடேபிள் குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா?

ஆகவே தான் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக செட்டிநாடு வெஜிடேபிள் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். ஏன் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். இப்போது செட்டிநாடு வெஜிடேபிள் குருமாவின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) – 1 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தேங்காய் பால் – 400 மிலி

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 3 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு – 4

* ஏலக்காய் – 3

* பட்டை – 1 துண்டு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் ஒரு கொதி விட்டு இறக்கினால், செட்டிநாடு வெஜிடேபிள் குருமா தயார்.

Image Courtesy: ticklingpalates

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு வெஜிடேபிள் குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு வெஜிடேபிள் குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment