அசைவம்

Chicken Uppu Kari Recipe | சிக்கன் உப்பு கறி ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிக்கன் உப்பு கறி ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அனைவரும் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக் கிழமை வந்துவிட்டது. ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறைச்சி கடைகள் கூட திறந்திருக்காது. ஆகவே முந்தைய நாளே இறைச்சிகளை வாங்கி வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் நிதானமாக விரும்பிய வகையில் இறைச்சியை சமைத்து ருசிக்கிறோம். இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், சிக்கன் உப்பு கறியை முயற்சிக்கலாம்.

சிக்கன் உப்பு கறி ஒரு அற்புதமான சைடு டிஷ் மற்றும் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதோடு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையைக் கொண்டது.

MOST READ:
நாவூற வைக்கும்… பெப்பர் மட்டன் கிரேவி

உங்களுக்காக சிக்கன் உப்பு கறி/ கோழி உப்பு கறியின் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, எப்படி இருந்தது என்ற உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* வர மிளகாய் – 5

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் மஞ்சள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். நீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன்பின் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியில் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், ருசியான சிக்கன் உப்பு கறி ரெடி!!!

Image Courtesy

இந்த பதிவின் மூலமாக சிக்கன் உப்பு கறி ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிக்கன் உப்பு கறி ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment