சைவம்

Custard Apple Milkshake Recipe In Tamil | சீத்தாப்பழம் மில்க் ஷேக்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது சீத்தாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த சீத்தாப்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இந்த மில்க் ஷேக் செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

* சீத்தாப்பழம் – 1-2 (நன்கு கனிந்தது)

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* குளிர்ந்த பால் – 1 கப்

செய்முறை:

* முதலில் சீத்தாப்பழத்தின் உள்ளே இருக்கும் தசைப்பகுதியை கரண்டியால் எடுத்து, மிக்சர் ஜார்/பிளெண்டரில் போட்டு, 1/4 கப் பால் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு அரைத்து, அதில் உள்ள விதைகளை எடுத்துவிட வேண்டும்.

* பின்னர் அதில் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது அரைத்ததை ஒரு டம்ளரில் ஊற்றினால், சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் தயார்.

இந்த பதிவின் மூலமாக சீத்தாப்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சீத்தாப்பழம் மில்க் ஷேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment