சைவம்

Diwali Special Basundi Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் பாசுந்தி

Basundi
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி (Basundi ) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் என்ன பலகாரங்களை செய்யலாம் என்ற பட்டியலை நீங்கள் போட்டுக் கொண்டிருந்தால், அதில் பாசுந்தியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பாசுந்தியை தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் செய்தாலே போதும். பாசுந்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, அவர்களை அசத்த நினைத்தால், பாசுந்தியை செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் – 1/2 லிட்டர்

* சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

* கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன்

* நட்ஸ் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* குங்குமப்பூ – சிறிது

* பொடித்த நட்ஸ் – 1 டீஸ்பூன்

* ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

Basundi Recipe செய்முறை:

* முதலில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிதை எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அது பாதியாக குறையும் வரை காய்ச்ச வேண்டும். பால் பாதியாக குறைந்ததும், அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து கிளறி விட்டு, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்நிலையில் இது மலாய் போன்று உருவாக ஆரம்பிக்கும். இப்போது அதை தொடர்ந்து கிளறி, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பாலானது சற்று கெட்டியாக மற்றும் க்ரீமியாக தெரியும் போது, அதில் நட்ஸ்களை சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் பொடி செய்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைத்து பின் பரிமாறினால், சுவையான பாசுந்தி தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment