சைவம்

Diwali Special Chettinad Seeni Paniyaram Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் செட்டிநாடு சீனி பணியாரம்

paniyaram
Written by admin

Paniyaram: நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளிக்கு பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் வித்தியாசமான பலகாரங்களை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் செய்யுங்கள். இது இனிப்பு சுவையுடன் அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
ஏனென்றால், செட்டிநாடு சீனி பணியாரத்தின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி – 1 கப்

* ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* சர்க்கரை – 1/2 கப்

* ஏலக்காய் – 2

* உப்பு – 1 சிட்டிகை

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

Paniyaram செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.

* பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். மாவானது தோவை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.

* அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள்.

* பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான செட்டிநாடு சீனி பணியாரம் தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment