சைவம்

Diwali Special Chettinad Ukkarai Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் செட்டிநாடு உக்கரை

Ukkarai Recipe
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல் செட்டிநாடு உக்கரை ரெசிப்பி (Ukkarai Recipe) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. பலரும் வீடுகளில் தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். தீபாவளி என்றாலே பலருக்கும் பட்டாசுக்கு அடுத்ததாக நினைவிற்கு வருவது, வீட்டில் செய்யும் பலகாரங்களாகத் தான் இருக்கும். இதுவரை தீபாவளிக்கு முறுக்கு, சீடை, அதிரசம், குலாப் ஜாமூன் போன்றவற்றைத் தான் செய்திருப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமான செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.

கீழே செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப் பருப்பு – 1/4 கப்

* ரவை – 1/8 கப்

* அரிசி மாவு – 1/8 கப்

* துருவிய தேங்காய் – 1/8 கப்

* ஏலக்காய் பொடி – 1/8 டீஸ்பூன்

* உப்பு – ஒரு சிட்டிகை

* முந்திரி – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* நெய் – 4 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 2 கப் + 1/2 கப்

வெல்லப் பாகு தயாரிக்க…

* வெல்லம் – 1/2 கப்

* தண்ணீர் – 1/4 கப்

Ukkarai Recipe செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, 2 கப் நீரை ஊற்றி, பாசிப்பருப்பை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, பின் அரிசி மாவை போட்டு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.

* பின் துருவிய தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள பாசிப் பருப்பைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.

* இறுதியில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருந்தால், அதில் ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால், சுவையான செட்டிநாடு உக்கரை தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment