சைவம்

Diwali Special Godhumai Oma Podi Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் கோதுமை ஓமப்பொடி

godhumai-omapodi
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை ஓமப்பொடி (Godhumai OmaPodi) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தீபாவளி பலகாரங்களை பலரும் தங்களின் வீடுகளில் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருடம் நீங்கள் சற்று வித்தியாசமான மற்றும் இதுவரை நீங்கள் முயற்சி செய்திராத ஒரு பலகாரம் செய்ய நினைத்தால், கோதுமை ஓமப்பொடி செய்யுங்கள். இந்த கோதுமை ஓமப்பொடி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது மற்றும் தீபாவளி பலகாரமாக செய்ய ஏற்றது. அதோடு இது வீட்டில் இருக்கும் கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடியது என்பதால் நீங்கள் இன்றே கூட இதனை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 1 கப்

* ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* எண்ணெய் – 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

Godhumai OmaPodi செய்முறை:

* முதலில் ஓம விதைகளை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் நீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் உப்பு, பெருங்காயத் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் வடிகட்டிய ஓம நீரை சேர்த்து நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முறுக்கு பிழியும் உழக்கை எடுத்து, அதில் சிறு சிறு துளைகளைக் கொண்ட தட்டை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் நன்கு சூடானதும், முறுக்கு உழக்கில் உள்ள மாவை எண்ணெயில் நேராக பிழிந்து விட வேண்டும்.

* பின் அதை பொன்னிறமாகும் வரை பொரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை கையால் நொறுக்கி விட்டால், சுவையான கோதுமை ஓமப்பொடி தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை ஓமப்பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை ஓமப்பொடி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment