சைவம்

தீபாவளி ஸ்பெஷல் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய்

Diwali special sweets
Written by admin

diwali karupatti mittai recipe

Diwali special sweets: தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வருகின்றது. தீபாவளிக்கு தேவையான துணிவகைகள் மற்றும் பட்டாசு வகைகளை வாங்கி வைத்திருப்போம் எனினும் தீபாவளிக்கான இனிப்புகளை வீட்டீலேயே தயாரித்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறும் சுகமே அலாதியானது. கடைகளில் விதம் விதமாக இனிப்பு வகைகள் இருந்தாலும், நம் கையால் ஒரு சிறந்த இனிப்பை தயாரித்து அதை அன்புடன் பரிமாறும் சுமமே சுகம். இனிப்பு என்றவுடன் காஜூ கத்ளி, லட்டு போன்ற கடினமான இனிப்பு வகைகளை நினைத்துக் கொள்கின்றீர்களா. மிகவும் எளிமையான இனிப்பை தயாரித்து இந்த தீபாவளியை இனிமையாக்குங்கள்.

கருப்பட்டி சீனி மிட்டாய் (Karupatti Mittai)

cheeni-mittai

சிறு வயதில் நாம் சீனி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். தற்போது அது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சிறு வயதில் சுவைத்த சீனி மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து சீனி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது. இங்கு கருப்பட்டி சீனி மிட்டாயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

karupatti mittai recipe

  • இட்லி அரிசி – 1 கப்
  • உளுத்தம் பருப்பு – 1/4 கப்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
  • கருப்பட்டி – 2 கப்
  • ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
  • சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு, அளவாக தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து, தனியாக 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

karupatti mittai recipe

பின்னர் கருப்பட்டியை தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை கரைய விட வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

karupatti mittai recipe

பிறகு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

karupatti mittai

பின்பு தனியாக வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான பாலிதீன் கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமாகும் வரை வேகவைக்கவேண்டும்.

karupatti mittai

பின்பு அதனை எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.

karupatti mittai

இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய் ரெடி!!!

மிகவும் எளிமையான இந்த இனிப்பை தயாரித்து இந்த தீபாவளியை இனிமையாக்குங்கள். இனிய  தீபாவளி நல் வாழ்த்துக்கள்… மகிழ்ச்சி..

About the author

admin

Leave a Comment