சைவம்

Diwali Special Milk Cake Recipe In Tamil | தீபாவளி ஸ்பெஷல் மில்க் கேக்

Milk Cake Recipe
Written by admin

Milk Cake Recipe: நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல் மில்க் கேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக பலகாரங்கள்/இனிப்புகள் செய்யும் வழக்கம்

தேவையான பொருட்கள்:

* முழு பால் – 1 லிட்டர்

* சர்க்கரை – 1/2 கப் அல்லது சுவைக்கேற்ப

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

Milk Cake Recipe செய்முறை:

* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

* பால் கால்வாசியாக குறையும் வரை நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது பாத்திரத்தின் முனையில் உறைந்துள்ள பாலை கீறி, பாலில் போட வேண்டும்.

* இந்நிலையில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பால் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். மறக்காமல் அவ்வப்போது பாத்திரத்தின் முனையில் உறைந்துள்ள பாலை கீறி, பாலில் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின்னர் மெதுவாக சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

* பால் நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் நெய் சேர்த்து தொடர்ந்து நன்கு கிளற வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் ஒரு பதத்தில் வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

* பின் ஒரு சிறு தட்டையான கிண்ணத்தில் நெய்யை நன்கு தடவி, அதில் இந்த கலவையைப் போட்டு சமமாக பரப்பி விட்டு, அந்த கிண்ணத்தை ஒரு அலுமினியத் தாள் கொண்டு நன்கு மூடி, பின் ஒரு துணியால் நன்கு மூடி வைக்க வேண்டும்.

* சில மணிநேரங்கள் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், மில்க் கேக் தயார்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல் மில்க் கேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல் மில்க் கேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment