செய்திகள்

பழங்களும் அதன் பயன்களும்

Written by admin

Fruits Benefits: பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் ‘பழந்தமிழர்கள். ‘முத்தமிழே…முக்கனியே…’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில முக்கியமான பழங்கள், அவற்றின் பலன்களை தெரிந்துகொள்வோம்

எலுமிச்சை


பயன் – எலுமிச்சை சாறு வாய் துர்நாற்றம், மயக்கம், வாந்தி, குமட்டல் போன்ற நோய்களை குணப்படுத்த உதவும். நகச்சுற்றை குணப்படுத்தும். தாகம் தணிக்கும் திறன்கொண்டது.

ஆரஞ்சு


பயன் – இரத்ததை தூய்மையாக்கும். பித்தம் குறைக்கும். செரிமான சக்தியையும் அதிகரிக்க்கும்.

கொய்யா


பயன் – நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு நல்லது. புற்றுநோய் அணுகாமல் காக்கின்றது.

நாவல் பழம்


பயன் – நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து. மூல வியாதி மற்றும் கல்லீரல் கோளாறுகள் தீர்க்க உதவும்.

நெல்லிக்காய்


பயன் – பசின்மையை தீர்க்கும். குமட்டல், வாந்தி, மற்றும் உடலின் அதிகபடியான வெப்பத்தை தணிக்கும்.

பப்பாளிப்பழம்


பயன் – குடல் எரிச்சல் மற்றும் கடும் வயிற்று வலியை குணப்படுத்தும். பெண்களுக்கான சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்கும்.

மாங்கனி


பயன் – உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் தருகிறது. கண் பார்வையை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு விந்து சுரத்தலை மேம்படுத்துகிறது.

வாழை


பயன் – மன அழுத்தத்தை குறைக்கும். பற்களை வெண்மையாக்கும். புற்றுநோய் அணுகாமல் காக்கின்றது.

சீதா பழம்


பயன் – உடல் வெப்பத்தை தணிக்கும்.

அன்னாசி


பயன் – உணவு செரிமானத்திற்கும் வலுவான எலும்புகள் பெறவும் உதவுகின்றது

மாதுளை


பயன் – பசியை தூண்டும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும். நரம்பு மண்டலத்தை சீராக வைக்கும்.

About the author

admin

Leave a Comment