அசைவம்

Hariyali Egg Gravy Recipe In Tamil | ஹரியாலி முட்டை கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஹரியாலி முட்டை கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஹரியாலி முட்டை கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் முட்டை கிரேவி ஆகும். இந்த முட்டை கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் முட்டை கிரேவி கேட்டால், ஹரியாலி முட்டை கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள். இதனால் நீங்கள் வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 4 (வேக வைத்தது)

* பட்டை – 1 இன்ச்

* பிரியாணி இலை – 1

* கிராம்பு – 2

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்

ஹரியாலி மசாலாவிற்கு…

* கொத்தமல்லி – 2 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

வெங்காய மசாலாவிற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பூண்டு – 4 பல்

* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் சிறிய மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 4-5 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் அதில் ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ஹரியாலி முட்டை கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஹரியாலி முட்டை கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment