பட்டுக்கோட்டை செய்திகள்

பட்டுக்கோட்டையில் ஹெல்மேட் அணிந்தால் திருக்குறள் புத்தகம் பரிசு அசர வைக்கும் இன்ஸ்பெக்டர்

Thirukural: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றதும் அப்படியே ஹெல்மெட் போட்டு ஓட்டினால் என்ன பரிசா தரப்போறிங்க என்று நையாண்டி பேசியவர்களை பார்த்திருக்கோம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு உண்மையிலேயே பரிசு வழங்கி உற்ச்சாகப்படுத்தி வருகிறார் பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் அன்பழகன்.

wearing helmet

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு வரும் இரு சக்கரவாகன ஓட்டிகள் அதிவேகமாக வருதால் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களது வாகனங்களை பதிவு செய்யாமலும், ஓடுநர் உரிமம் இல்லாமலும் ஓட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை பேரூந்துநிலைய சாலையில் தினமும் மாலைவேளையில் வாகன சோதனையில் ஈடுபட்டுவரும் காவல் துறை ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து அவர்களை மற்ற வாகன ஓட்டிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதாக பாராட்டி திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

pattukkottai tropic police

அதே நேரத்தில் ஹெல்மெட் உயிர் காக்கும் கவசம் என்பதை மறந்து, போக்குவரத்து விதியை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதையும் தவறாமல் செய்துவருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பட்டுக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் புதிய ஹெல்மெட் அணிந்து காவல் துறை ஆய்வாளா் அன்பழகன்னிடம் இருந்து திருக்குறள் புத்தகங்களை பரிசக்கா பெற்றுச்சென்றுள்ளனர்.

gift for thirukural book

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அன்பழகன் கூறுகையில்:

நாம் ஒருவருக்கு கொடுக்கின்ற பரிசு அவரது வாழ்நாள் முழுவதும் பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசு அளிப்பதாக தெரிவித்தார் காவல் துறை ஆய்வாளா் அன்பழகன். இருசக்கர வாகன ஓட்டிகள் போலீஷ்சாரின் வாகன சோதனையை கெடுபுடியாக கருதாமல் தலைக்கவசம் விபத்தின் போது தங்களின் தலையை காக்கும் உயிர் கவசம் என்றுகருத்தியாவது ஹெல்மெட் அணியவேண்டும் என்பதே காவல்துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.

தலைக்கவசம் அணிவோம் உயிர் காப்போம்..

About the author

admin

Leave a Comment