சைவம்

How To Make Pizza At Home Without Oven In Tamil | ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிட்சா ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடைகளில் பிட்சா வாங்கி சாப்பிடுவீர்களா? ஆனால் இனிமேல் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆம், உங்கள் வீட்டில் ஓவன் இல்லாவிட்டாலும், எளிய முறையில் பிட்சா செய்யலாம். கடைகளில் விற்கப்படும் பிட்சாவை விட வீட்டிலேயே தயாரிக்கும் பிட்சா ஆரோக்கியமானது. அதோடு இந்த பிட்சாவில்

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 2 1/2 கப்

* மைதா – 1/2 கப்

* பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 1 முதல் 1 1/4 கப்

டாப்பிங்கிற்கு…

* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* பேபி கார்ன் – 1/2 கப் (நீளமாக நறுக்கியது மற்றும் பாதியாக வேக வைத்தது)

* ஆரிகனோ – 1/4 டீஸ்பூன்

* பிட்சா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்

* மெசரெல்லா சீஸ் – 1/2 கப்

* சில்லி பிளேக்ஸ் – 1 சிட்டிகை

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, மைதா மற்றும் பேக்கிங் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பேக்கிங் சோடா, சர்க்கரை, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

* பின்பு சிறிது சிறிதாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் பிசைந்த மாவை ஒரு தட்டு கொண்டு மூடி 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதற்குள் டாப்பிங்கை தயாரித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி கார்ன், குடைமிளகாய், வெங்காயம், ஆரிகனோ மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிசைந்த மாவானது சற்று உப்பி வந்ததும், அதை ஒரு முறை நன்கு பிசைந்து, 3 உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு உருண்டையை எடுத்து அதை தட்டையாக பிட்சாவின் பேஸ் போல் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் ஃபோர்க் கொண்டு ஆங்காங்கு துளையிட வேண்டும்.

* பின்பு அதன் மேல் எண்ணெயைத் தடவ வேண்டும். அதன் பின் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள பேஸை வைத்து, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் பேஸை திருப்பிப் போட்டு, 3 நிமிடம் வேக வைத்து, அதன் மேலே பிட்சா சாஸை பரப்பி, வதக்கி வைத்துள்ள காய்கறிகளைப் பரப்பி, துருவிய சீஸையும் பரப்பி, மூடி வைத்து 2 நிமிடம் சீஸ் உருகும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, சூடாக இருக்கும் போது துண்டுகளாக வெட்டி பரிமாறினால், பிட்சா தயார். இதேப் போல் மற்ற இரு உருண்டைகளையும் செய்யுங்கள்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment