சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் கடைசி விவசாயி | Kadasi Vivasayi

kadasi-vivasayi
Written by admin

kadasi-vivasayi

Kadasi Vivasayi : முதல் படமான காக்கா முட்டை மூலமே பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் மணிகண்டன், அடுத்ததாக விவசாயிகள் பிரச்சினையை கதைக்களமாகக் கொண்டு புதிய படம் இயக்க இருக்கிறார்.

ஏழைக் குழந்தைகளின் பீட்சா ஆசையை கதைக்களமாகக் கொண்டு மணிகண்டன் இயக்கிய காக்காமுட்டை தேசிய விருதைப் பெற்றது. முதல் படம் மூலமே கவனிக்கத்தக்க இயக்குநர்களுள் ஒருவர் ஆனார் மணிகண்டன்.

காக்கா முட்டையைத் தொடர்ந்து அவர் இயக்கிய குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படங்கள் நல்ல வரவேற்பை தந்தது.

இந்நிலையில், தனது புதிய படத்திற்கான வேலையை அவர் தொடங்கி விட்டார். இப்படம் விவசாயிகள் பிரச்சினையை மையமாகக் கொண்டதாம். இந்தப் படத்திற்கு ‘கடைசி விவசாயி’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. இந்த படத்தில் விவசாயிகள் படும் கஷ்டங்களை மிக எளிமையாக அதே நேரத்தில் அழுத்தமாக இயக்குனர் சொல்லவுள்ளாராம்.

kadasi-vivasayi

இயக்குனர் மணிகண்டனும் நடிகர் விஜய்சேதுபதியும் குறும்படங்கள் இயக்கும் காலத்திலிருந்து ஒன்றாக இணைந்து பல குறும்படங்கள் பணிபுரிந்துள்ளனர். இந்த பழக்கம் வெள்ளித்திரையிலும் தொடர்ந்தது. விஜய் சேதுபதியை வைத்து மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படம் வெளியாகி செம ஹிட் அடித்தது.

தற்போது அடுத்த படம்மான கடைசி விவசாயி படத்தில், முதலில் விஜய் சேதுபதிதான் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. பின்னர், அவர் பிஸியாகிவிட்டதால் வேறு ஒரு புது முகத்தை வைத்து இப்படத்தை எடுப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதுவும் சரிவராததால் தானே அப்படத்தில் நடிப்பதாக கூறி நடித்து வருகிறார்.

மிக வித்தியாசமான வேடத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இயக்குநர் மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

முன்னதாக லாபம் என்று எஸ்.பி. ஜனநாதன் படத்திலும் வேறு மாதிரியான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

About the author

admin

Leave a Comment