சைவம்

Katharikai Podi Curry Recipe In Tamil | கத்திரிக்காய் பொடி கறி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் பொடி கறி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அனைவருக்குமே கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். மேலும் கத்திரிக்காயை வேகமாக சமைத்துவிடலாம். நீங்கள் கத்திரிக்காய் பிரியர் என்றால், உங்களுக்கான ஒரு அருமையான கத்திரிக்காய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் கத்திரிக்காய் பொடி கறி. இந்த கத்திரிக்காய் பொடி கறி சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 10 (சிறியது)

* உப்பு – சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு…

* மல்லி – 1 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 3

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு கத்திரிக்காயை நீரில் நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் கத்திரிக்காயைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு தூவி, 90% நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியைத் தூவி நன்கு கத்திரிக்காயை வேக வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார்.

Image Courtesy: happietrio

இந்த பதிவின் மூலமாக கத்திரிக்காய் பொடி கறி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கத்திரிக்காய் பொடி கறி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment