அசைவம்

Lemon Pepper Chicken Recipe In Tamil | லெமன் பெப்பர் சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான லெமன் பெப்பர் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

விடுமுறை நாட்களில் விருப்பமான மற்றும் வித்தியாசமான சில ரெசிபிக்களை செய்து சுவைக்க பலருக்கும் ஆசை இருக்கும். இந்த வாரம் நீங்கள் அப்படி ஏதாவது செய்ய விரும்பினால் லெமன் பெப்பர் சிக்கனை செய்யலாம். சிக்கன் பலருக்கும் பிடித்த அதே சமயம் விலை குறைவான உணவுப் பொருள் என்பதால் வாரந்தோறும் சிக்கனை வாங்குவோர் ஏராளம். அதோடு சிக்கனில் ஏராளமான சத்துக்களும் உள்ளன. முக்கியமாக புரோட்டீன் உள்ளது. எனவே அடிக்கடி சிக்கனை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

சிக்கனுக்கு…

* எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகு தூள் – சுவைக்கேற்ப

* முட்டை – 1

* மைதா – 1/4 கப்

* சோள மாவு – 1/4 கப்

* எண்ணெய் – பொரிப்பதற்கு

சாஸ் செய்வதற்கு…

* எலுமிச்சை சாறு – 3 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 2 டீஸ்பூன் (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* சோள மாவு – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அதில் மிளகுத் தூள், உப்பு, முட்டை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பிறகு ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களான எலுமிச்சை சாறு, சோயா சாஸ், பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் பௌலில் வைத்துள்ள சாஸை சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட்டு இறக்கினால், சுவையான லெமன் பெப்பர் சிக்கன் ரெடி!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக லெமன் பெப்பர் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி லெமன் பெப்பர் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment