அழகு குறிப்பு

இளமையாக இருக்கணுமா? அப்ப இத படிங்க | Live young forever

Live young forever
Written by admin

Live young forever: பெண்கள் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க முடியும்.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

வெயில் பயணத்தை தவிர்க்கவும்:

ஆமாங்க, காலைல 10 மணில இருந்து மாலை 4 மணி வரை சூரிய வெப்பம் ரொம்பவே அதிகம். தவிர்க்க முடியாத பயணத்தின் பொது குடை அல்லது தொப்பியை எடுத்து செல்லலாம்.

மோசமான உணவு கட்டுப்பாடு வேண்டாம்:

ஆரோக்கியமற்ற உணவு கட்டுப்பாடு உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும். பால் மற்றும் மீன் உங்களது எலும்புகளை பராமரிக்க மிக முக்கியம்.

புகைத்தல் முதிர்ந்த தோற்றம் தரும்:

புகைப்பிடிக்கிறதுனால உங்க இரத்த ஓட்டம் வெகுவா குறைஞ்சும் போகுதுங்க.

சிரித்து கொண்டே இருங்க:

இளமையாக இருக்க நீங்க தினமும் சிரிச்சே ஆகணும். புன்னகைத்தால் இளமையாக மட்டும் இல்ல நீங்க அழகாவும் இருக்கீங்க.

About the author

admin

Leave a Comment