சைவம்

Maharashtrian Red Chilli Chutney Recipe In Tamil | மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு மகாராஷ்டிரா ரெசிபியை செய்யுங்கள். அது தான் மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* சிவப்பு மிளகாய் – 4-5

* பூண்டு – 4-5

* உப்பு – சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதை சட்னியுடன் சேர்த்து கலந்தால், மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி தயார்.

இந்த பதிவின் மூலமாக மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment