அசைவம்

மல்லூர் மீன் ப்ரை | Mallur Fish Fry Recipe

Written by admin

துண்டு மீன்கள் ருசி வகையில் தனிரகம். `மல்லூரி மீன் ப்ரை ( Mallur Fish Fry Recipe )’ அதில் இன்னும் ஸ்பெஷல் ரகம். தயாரித்து சுவைக்கலாமா?

தேவையான பொருட்கள்

மீன் – 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் – ஒரு கைப்பிடியளவு
சாம்பார் வெங்காயம் –  2 கைப்பிடியளவு
உரித்த பூண்டு – ஒரு கைப்பிடியளவு
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

Mallur Fish Fry Recipe செய்முறை

மீனை சுத்தம் செய்து முள் நீக்கி சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.

பின்பு தனியா தூள், மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

பூண்டு, வெங்காயம் வதங்கிய பிறகு மீனையும் சேர்க்கவும். ஏனைய பொருட்களுடன் மீன் நன்கு வெந்து டிரை ஆனதும் அடுப்பை அணைக்கவும்.

இப்போது ‘மல்லூர் மீன் ப்ரை’ ரெடி.

About the author

admin

Leave a Comment