சைவம்

Mughlai Paneer Gravy Recipe In Tamil | முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது நாண் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? இன்னும் எதுவும் யோசிக்காமல் இருந்தால், இரவு முகலாய் பன்னீர் கிரேவி செய்யுங்கள். புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள். குறிப்பாக குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு இன்று விருந்தளிக்கும் வகையில் சமைத்துக் கொடுக்க நினைத்தால், இந்த முகலாய் பன்னீர் கிரேவி சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் இது காரமாக இருக்காது மற்றும் மிகவும் க்ரீமியாக சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3-4

* முந்திரி – 10-12

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* சாஹி சீரகம் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* தயிர் – 1/2 கப்

* உலர்ந்த வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன்

* க்ரீம் – 1/2 கப்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முந்திரியைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி, வெங்காயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சாஹி சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் தயிரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

* இறுதியாக அதில் உலர்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கிப் போட்டு, க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், முகலாய் பன்னீர் கிரேவி தயார்.

இந்த பதிவின் மூலமாக முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment