You Are Here: Home » ஆன்மீக செய்திகள் » பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோவில் தேர் திருவிழா…

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோவில் தேர் திருவிழா…

therottam
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 22ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவில் காமதேனு, அன்னம், பூத, சிம்மம், ஓலைச்சப்பரம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார்.

திருவிழாக்களில் முக்கிய நாளான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வாணவேடிக்கைகள் முழங்க பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடித் தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரிரோடு, பிள்ளையார்கோயில்தெரு வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு நாடியம்மனின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்து திருவருளை பெற்றுச் சென்றனர்.

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top