சைவம்

Onion Vada Recipe In Tamil | வெங்காய வடை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வெங்காய வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? நீங்கள் வடை பிரியரா? அப்படியானால் வெங்காயத்தைக் கொண்டு வடை செய்து சாப்பிடுங்கள். இந்த வெங்காய வடை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை திடீரென்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போதும் செய்து கொடுக்கலாம். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மைதா – 1 கப்

* அரிசி மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1-2 சிட்டிகை

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைய வேண்டும்.

* பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நீரைத் தவிர மைதா, அரிசி மாவு மற்றும் பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து சற்று கெட்டியான மாவாக பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, வடை போன்று தட்டி, நடுவே விரலால் துளையிட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான வெங்காய வடை தயார்.

Image Courtesy: yummyoyummy

இந்த பதிவின் மூலமாக வெங்காய வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வெங்காய வடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment