சைவம்

Parangikai puli kuzhambu Recipe | பூசணிக்காய் புளிக்குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.
கீழே பூசணிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* வெங்காய வடகம் – 6 துண்டு

* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்துக் கொள்ளவும்)

* பூண்டு – 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* மஞ்சள் பூசணிக்காய் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெல்லம் – ஒரு சிறு துண்டு

* தண்ணீர் – தேவையான அளவு

* புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

* பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக பூசணிக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பூசணிக்காய் புளிக்குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment