தஞ்சையில் (Radiology Technology Assistant Job) நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு

நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் (Radiology Technology Assistant Job) பணியிடத்திற்கு பதிவு மூப்பு பட்டியல் களை வரும் 8ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Technical-Assistant-job

சென்னை மருத்துவத்துறை செயலர் அறிவித்துள்ள நுண்கதிர் உதவியாளர் பணியிடத்திற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினரால் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கான கல்வித் தகுதி விஞ்ஞானப் பாடத்தில் மேல்நிலை கல்வி மற்றும் அரசு அனுமதி பெற்ற பயிற்சி நிறுவனத்தில் ரேடியோகிராபர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேற் கண்ட கல்வித் தகுதியை இந்த அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் 8ம் தேதிக்குள் மதியம் 2 மணி முதல் 5 மணிக்குள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பொது மற்றும் தொழிற் கல்விச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

மேற்கண்ட தேதிக்குள் வராதவர்கள் மனுக்கள் பரிந்துரை செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About the author

admin

Leave a Comment