சைவம்

Ragi Halwa Recipe | ருசியான… ராகி அல்வா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… ராகி அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையான ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், ராகி அல்வாவை செய்யலாம். ராகி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. உடலுக்கு வலிமையளிக்கக்கூடியது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்வா பிடிக்குமானால், அவர்களுக்கு இன்று ராகி அல்வா செய்து கொடுங்கள்.

இது நிச்சயம்

MOST READ: தேங்காய் பாயாசம்

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு – 1/2 கப்

* நெய் – 4 டேபிள் ஸ்பூன்

* சூடான பால் – 1 கப்

* சர்க்கரை – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க…

* பாதாம் – 6-7 (பொடியாக நறுக்கியது)

* பிஸ்தா – 6- (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 கப் ராகி மாவை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் கெட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை உருக கிளறி விடவும்.

* பிறகு அதில் 1 கப் நன்கு சூடான பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். பால் சேர்த்த பின் கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும்.

* எப்போது வாணலியில் ஒட்டாத பதத்தில் கலவை வருகிறதோ, அப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்தால், சுவையான ராகி அல்வா ரெடி!!!

Image Courtesy

இந்த பதிவின் மூலமாக ருசியான… ராகி அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… ராகி அல்வா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment