சைவம்

Ragi Pakoda Recipe | ராகி பக்கோடா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ராகி பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் பக்கோடா செய்து சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் பக்கோடா செய்வதற்கு தேவையான கடலை மாவு இல்லையா? கவலையை விடுங்கள். வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டே எளிய முறையில் பக்கோடா செய்யலாம். பொதுவாக ராகி உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக ராகி ஈறுகளுக்கு நல்லது என்பதால், அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஈறுகள் வலுவடையும்.

ராகி பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது ராகி பக்கோடாவை எப்படி செய்வதென்று, அதன் எளிமையான செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு – 1 கப்

* சாம்பார் வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் – 5

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைகேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பொடியாக நறுக்கிய வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது நீர் ஊற்றி, உதிரி உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை, எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ராகி பக்கோடா ரெடி!

குறிப்பு:

* விருப்பமுள்ளவர்கள் ராகி பக்கோடா மாவுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* அதேப் போல் கொத்தமல்லியையும் ராகி பக்கோடா தயாரிக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக ராகி பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ராகி பக்கோடா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment