அசைவம்

Ramzan Special: Mughlai Mutton Masala Recipe In Tamil | ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ரம்ஜான் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரம்ஜான் அன்று இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் மட்டன் சமைப்பார்கள். இந்த ரம்ஜான் பண்டிகை அன்று ஸ்பெஷலான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், முகலாய் மட்டன் மசாலாவை செய்யுங்கள். இந்த மட்டன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த மட்டன் மசாலா வெள்ளை சாதம், பிரியாணி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 1/2 கிலோ

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு…

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (கீறியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 3 (அரைத்தது)

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* முந்திரி – 50 கிராம்

* கொத்தமல்லி – ஒரு கையளவு (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 சிறிய துண்டு

* ஏலக்காய் – 5

* கிராம்பு – 4

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை கழுவிப் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயைக் குறைத்து 15 நிமிடம் மட்டனை வேக வைத்து, பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

* பின் ஒரு பௌலில் முந்திரியைப் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அரைத்த முந்திரியை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 15-20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முகலாய் மட்டன் மசாலா தயார்.

இந்த பதிவின் மூலமாக ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment