சைவம்

Sakkaravalli Kizhangu Varuval | சுவையான… சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஏனெனில் கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 5

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்

* எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை உரித்துவிட்டு, வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பின்பு ஒரு கடாய்/பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

* பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

* பிறகு, வெட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகாய் தூற் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு கிளறி விட வேண்டும்.

* கிழங்கு கடாயில் ஒட்டுவது போன்று இருந்தால், சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குலைந்துவிடும் வகையில் கிளறி விடாதீர்கள். கிழங்கு ஓரளவு நன்கு வதங்கிய பின், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் தயார்.

குறிப்பு:

* இந்த வறுவல் செய்வதற்கு நான்ஸ்டிக் பயன்படுத்தினால், பாத்திரத்தில் அதிகம் ஒட்டுவதும் குறையும் மற்றும் எண்ணெயும் அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை.

* இஞ்சி மற்றும் பூண்டு வாய்வுத் தொல்லை பிரச்சனையைத் தடுக்க உதவும்.

* வேண்டுமானால், தாளிக்கும் போது சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் சாம்பார் பொடிக்கு பதிலாக கரங்ம மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

* கிழங்கு இனிப்பு என்பதால், மிளகாய் தூளை

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக சுவையான… சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment