சைவம்

Soya Chunks Salna Recipe In Tamil | மீல் மேக்கர் சால்னா

Soya Chunks Salna
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மீல் மேக்கர் சால்னா (Soya Chunks Salna) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மீல் மேக்கரைக் கொண்டு சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் அளவில் ருசியான சால்னா செய்யலாம். இந்த மீல் மேக்கர் சால்னா செய்வது மிகவும் சுலபம். அதோடு, இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது அவசர நேரத்தில் செய்ய ஏற்றது.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* கறி மசாலா பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மீல் மேக்கர் – 2-3 கப்

வதக்கி அரைப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* தேங்காய் – 1 கப் (துருவியது)

Soya Chunks Salna செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடியால் பாத்திரத்தை 15-20 நிமிடம் மூடி வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் கறி மசாலா பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின்பு மீல் மேக்கரை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு பத்து நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மீல் மேக்கர் சால்னா தயார்.

இந்த பதிவின் மூலமாக மீல் மேக்கர் சால்னா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மீல் மேக்கர் சால்னா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment