சைவம்

Sprouted Whole Green Gram Gravy Recipe In Tamil | முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

முளைக்கட்டிய பச்சை பயறு உடலுக்கு மிகவும் நல்லது.
இப்போது முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு/பாசி பயறு – 1/2 கப்

தேங்காய் மசாலாவிற்கு…

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* வரமிளகாய் – 2

* புளி பேட் – 1/4 டீபூன்

* தேங்காய் எண்ணெய் – 2 டீபூன்

* கடுகு – 1 டீபூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பச்சை பயறு அல்லது பாசி பயறை நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை நன்கு நீரில் கழுவி, ஒரு ஈரமான துணியில் போட்டு கட்டி தொங்க விடவும். மறுநாள் பாசி பயறு முளைக்கட்டியிருக்கும். இப்போது அதை மீண்டும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் புளியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் உள்ள முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கிரேவியுடன் சேர்த்து கிளறினால், முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment