சைவம்

Sulaimani Tea Recipe In Tamil | மலபார் ஸ்பெஷல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ. இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த டீயை மலபாரில் உள்ள மக்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு குடிப்பார்கள். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதோடு உடலில் உள்ள கொழுப்புக்களையும் குறைக்க வல்லது.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் – 2 கப்

* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்

* கிராம்பு – 2

* பட்டை – 1/4 இன்ச்

* ஏலக்காய் – 2

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* டீ தூள் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – விருப்பமிருந்தால் சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.

* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* இறுதியாக, அதை வடிகட்டினால், சுவையான சுலைமணி டீ தயார்.

குறிப்பு:

* இந்த டீ தயாரிக்கும் போது, இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

* டீ தூள் சேர்க்க விருப்பமில்லாதவர்கள், அதைத் தவிர்க்கலாம்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment