You Are Here: Home » ரா‌சி பல‌ன் » Today rasi palan | இன்றைய ராசிபலன்கள் (18/07/2017)

Today rasi palan | இன்றைய ராசிபலன்கள் (18/07/2017)

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப் பது நல்லது. உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.

கடகம்

கடகம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தைரி யமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். போராட்டமான நாள்.

துலாம்

துலாம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நட்பு வட்டம் விரியும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர் கள். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top