சைவம்

Urad Dal Bonda Recipe | உளுந்து போண்டா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான உளுந்து போண்டா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சரியான தேர்வாக இருக்கும். அதிலும் உளுந்து போண்டா என்றால் இன்றும் அற்புதமாக இருக்கும். அதோடு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் வலிமையாக இருக்கும்.

உங்கள் குழந்தைகள் உளுந்து போண்டாவை விரும்பி சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து கொடுக்கலாம் தானே! ஆனால்

MOST READ: மொறுமொறுப்பான… பன்னீர் நக்கட்ஸ்

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1 கப்

* வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – 1 கையளவு

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை கழுவி, கிரைண்டரில் போட்டு, நீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் மாவை எடுத்துக் கொண்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உளுந்து போண்டா ரெடி!

* இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக உளுந்து போண்டா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி உளுந்து போண்டா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment