சைவம்

White Kurma Recipe In Tamil | வெள்ளை குருமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வெள்ளை குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 2

* கிராம்பு – 1

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1 கப்

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 4-5

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 4-5

* கிராம்பு – 1

* ஏலக்காய் – 2

* பட்டை – 1

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெள்ளை குருமா தயார்.

Image Courtesy: steffisrecipes

இந்த பதிவின் மூலமாக வெள்ளை குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வெள்ளை குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment