Bigg boss Tamil: பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது.
பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.
குறிப்பிட்ட போட்டியாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள், எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் அந்த வீட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, செல்போன், இணையம், கடிகாரம், பேனா, பென்சில், பேப்பர்… எந்தத் தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. போட்டியாளர்கள் வெளிஉலகத் தொடர்பில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.
அவர்களுக்குள் போட்டிகள், கேம்கள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கான்செப்ட்.
கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் சகாக்களுடன் இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் பேசக்கூடாது. கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. சில நேரங்களில் விதிகளை மீறுதல், வேறு ஏதாவது முக்கியமான பிரச்னை வரும்போது, அதற்குக் காரணமான அந்த நபர், நேயர்களின் வாக்கு இல்லாமலேயே வெளியேற்றப்படுவார். இதுதான் இந்தி பிக்பாஸ் விதிகள்.
பிக் பாஸுக்கான பிரத்யேக வீடு புனேவில் உள்ள லோனோவாலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட அந்த சொகுசு வீட்டில் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் 60 முதல் 80 கேமராக்கள் வரை பொருத்தப்படும். 24 மணிநேரமும் அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
‘இந்தி பிக் பாஸில் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே அறையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் வெவ்வேறு அறைகள். இப்படி நம் கலாசாரத்தை மனதில் வைத்து சில மாற்றங்களை செய்துள்ளனர். மற்றபடி அதே கான்செப்ட்தான். 100 நாள், 100 எபிசோட். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி மறுநாள் மதிய நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளர் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே வருவார். அப்போது போட்டிகள், கலந்துரையாடல்கள் இருக்கும். நிறைய சவால்களை சந்தித்து சாதனை படைப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும்.
Clique | Season 1 |
மாடல் | ஆரவ் |
போட்டியாளர் | ரைசா வில்சன் |
திரைப்பட நட்சத்திரம் | ஸ்ரீ |
அனுயா | |
ஓவியா | |
கணேஷ் வெங்கட்ராமன் | |
சக்தி வாசுதேவன் | |
நமீதா | |
பரணி | |
நடன இயக்குனர் | காயத்ரி ரகுராம் |
பாடலாசிரியர் | சினேகன் |
நகைச்சுவையாளர் | வையாபுரி |
கஞ்சா கருப்பு | |
ஆர்த்தி | |
பிரபலம் அல்லாதவர் | ஜூலியானா |
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…