Categories: சைவம்

Chocolate Brownie Recipe | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

கிறிஸ்துமஸ் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சாக்லேட் ப்ரௌனி. இதுவரை நீங்கள் சாக்லேட் ப்ரௌனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். என்ன தான் இது
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கிறிஸ்துமஸ் அன்று ஸ்பெஷலாக சாக்லேட் ப்ரௌனியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மைதா – 1/2 கப்

* உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்

* சர்க்கரை – 3/4 கப்

* முட்டை – 2

* கொக்கோ பவுடர் – 1/3 கப்

* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

* பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்

* சாக்லேட் சிப்ஸ் – 1 கப்

* உப்பு – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனை எடுத்து, அதன் மேல் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும்.

* பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இப்போது அதில் கொக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும்

* பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

* பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பிவிடவும்.

* பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான சாக்லேட் ப்ரௌனி தயார்.

இந்த பதிவின் மூலமாக கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago