தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கை: மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 33 நிர்வாகிகள் நீக்கம்!

தி.மு.க.வின் 3 மாவட்ட செயலாளர்கள் (DMK District Secretaries) உள்பட 33 தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விடுத்துள்ள அறிவிப்பில், ”நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததையடுத்து, கட்சியில் மறுசீரமைப்புக்காக குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு தற்போது அளித்துள்ள அறிக்கையின்படி, தேர்தலின்போது கட்சி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக, தி.மு.க. நிர்வாகிகள் 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 33 பேரும் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர்கள் அனைவரும் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

நீக்கப்பட்டவர்கள் மாவட்ட செயலாளர்கள்

1. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம்.

2. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம்.

3. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம்.

4. சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி

5. சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம்.

6. தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

7. மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம்.

8. சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

9. ராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி

10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.

11. ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர்,

12. பாப்பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்,.

13. ஓமலூர் பரமன், ஓமலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

14. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

15. காசிவிசுவநாதன், மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர்.

16. கார்த்திகேயன், தியாகதுருகம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

17. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

18. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர்.

19. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

20.ராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

21. கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர்.

22. ஆனந்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

23. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

24. ஜெயபால், கடலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

25. ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர்.

26. தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர்.

27. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர்.

28. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர்.

29. சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

30. ராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர்.

31. கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்.

32. கே.பி. ராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர்.

33. எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர்.

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago