Categories: அசைவம்

Eid Al Adha Special Recipe: Bengali Style Mutton Curry In Tamil | பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பக்ரீத் ஸ்பெஷலாக உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி/கிரேவி செய்யுங்கள். இது சாதத்திஙறகு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்தால், அது

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 250 கிராம்

* கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் – 1

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 2

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* தயிர் – 1/2 கப்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி ஆடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் தயிர் சேர்த்து பிரட்டி, ஒரு கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். ஒருவேளை மட்டன் வேகாமல் இருந்தால், மீண்டும் மூடி 2 விசில் சிட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டனை கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago