Categories: சைவம்

Coconut Chutney Recipe | ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நம்மில் பலருக்கும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சட்னிகள் என்றால் பிடிக்கும். அதில் குறிப்பாக நிறைய பேருக்கு பிடித்தது எனில், அது தேங்காய் சட்னி தான். நாமும் வீட்டில் தேங்காய் சட்னியை அரைத்து, இட்லி, தோசைக்கு சாப்பிட்டதுண்டு. ஆனால் வீட்டில் செய்யப்படும் தேங்காய் சட்னியோ, ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி போல் இருக்காது.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் – 1 கப் (துருவியது)

* பச்சை மிளகாய் – 1

* இஞ்சி – 1 சிறிய துண்டு

* சீரகம் – ஒரு சிட்டிகை

* உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்!

இந்த பதிவின் மூலமாக ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago