Categories: சைவம்

Vegetable Oothapam Recipe In Tamil | சத்தான… வெஜிடபிள் ஊத்தாப்பம்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சத்தான… வெஜிடபிள் ஊத்தாப்பம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

காலையில் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? சற்று சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய தக்காளி – 1 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கேரட் – 2 டேபிள் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஓரளவு கெட்டியான தோசை மாவை எடுத்துக் கொள்ளவும்.

* பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.

* பிறகு அதன் மேல் சிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.

* பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.

இந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு
தேங்காய் சட்னி
மிகவும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பு:

வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேவையான காய்கறிகள் முற்றிலும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் வேகமாக வெந்துவிடும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக சத்தான… வெஜிடபிள் ஊத்தாப்பம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சத்தான… வெஜிடபிள் ஊத்தாப்பம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago