சைவம்

Bengali Luchi Recipe In Tamil | பெங்காலி லுச்சி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பெங்காலி லுச்சி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? ஆனால் வீட்டில் கோதுமை மாவு இல்லையா? மைதா மாவு உள்ளதா? அப்படியெனில் அந்த மைதாவைக் கொண்டு பெங்காலி லுச்சி செய்யுங்கள். லுச்சி என்பதும் பூரியைப் போன்றது தான். ஆனால் லுச்சி என்பது வெள்ளை நிறத்தில் மைதாவில் நெய் அதிகம் சேர்த்து பிசைந்து செய்யப்படும் பூரி ஆகும். இந்த லுச்சி மிகவும் சுவையாக இருக்கும். இந்த லுச்சியை தால், சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு கிரேவி என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மைதா – 2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்/ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது நீரைத் தெளித்து, கையால் நன்கு பிசைய வேண்டும்.

* பின்பு மெதுவாக நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை பிசைய வேண்டும். மாவானது கையில் ஒட்டக்கூடாது.

* பிறகு பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அந்த உருண்டைகளை எண்ணெய் பயன்படுத்தி பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து முன்னும் பின்னும் வெள்ளை நிறம் மாறாமல் வேக வைத்து எடுத்தால், பெங்காலி லுச்சி தயார்.

இந்த பதிவின் மூலமாக பெங்காலி லுச்சி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பெங்காலி லுச்சி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment