பட்டுக்கோட்டை செய்திகள்

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

Social activist Balamurugan
Written by admin

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர்

Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த பிறகும் சொந்தம் கொண்டாட வராததால் அனாதையாக்கப்படும் சடலங்கள் பரிதாபத்தின் உச்சம்..!

வெவ்வேறு வயிற்றில் பிறந்திருந்தாலும்… சாதி – மதத்திற்கு அப்பாற்பட்டு பழகுபவர்களுக்கு மத்தியில், ஒரு படி மேலே சென்று… கைவிடப்பட்ட சடலங்களை எல்லாம் உறவாக்கி கொள்ளும் உன்னத உள்ளம் படைத்தவர்கள் தான், இந்த பாலமுருகன் (வயது 40) எம்.பி.ஏ. பட்டதாரி.

Social activist Balamurugan

ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வதில் ஆத்ம திருப்தி அடைந்து வரும் தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற நிலையில் இருந்து இறந்தவர்கள் மற்றும் உடல் அடக்கம் செய்ய வசதி இல்லாத நிலையில் உள்ள ஏழைகளின் உடல்களை நகராட்சி மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தனது சொந்த செலவில் வாகனத்தில் ஏற்றி சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த உடல்களை அடக்கம் செய்து விடுவார்.

கடந்த 4 ஆண்டுகளாக இதுவரை 66 ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக அடக்கம் செய்வதற்கான செலவுக்கு கூட காசு இன்றி தவிக்கும் மக்களை மனதில் கொண்டு இவர் அறிமுகம் செய்திருப்பது தான், இந்த அமரர் ஊர்தி. தனது சொந்த முயற்சியில் மூன்று லட்ச ரூபாய் செலவழித்து இவர் அறிமுகம் செய்துள்ள வாகனத்தை அணுகி, இனி ஏழைகளும் எளிதில் பயன் பெற்றுக்கொள்ளலாம்.

Social activist Balamurugan

முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்த வாகனத்தை ஏழைகளின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

இவரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இப்படி மனித நேயத்தை கடந்து ஆன்ம நேயம் கொண்ட மனிதர்களாக வலம் வரும் இவரின் சேவை தொடர நாமும் வாழ்த்துவோம். அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை.

 

 

 

About the author

admin

Leave a Comment