Pattukkottai Nadiamman Temple Therottam LIVE
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவில் காமதேனு, அன்னம், பூத, சிம்மம், ஓலைச்சப்பரம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார். திருவிழாக்களில் முக்கிய நாளான திருத்தேரோட்டம் (Pattukkottai Nadiamman Temple Therottam)இன்று மாலை வாணவேடிக்கைகள் முழங்க பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியை உலகமெங்கும் வாழும் நாடியம்மன் பக்த்தர்கள் கண்டு மகிழ பட்டுக்கோட்டை SPG Studio நிறுவனத்தினர் அருள்மிகு நாடியம்மன் கோயில் தேர்திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். பக்தர்களும் பொதுமக்களும் விழாவை கண்டு அம்மன் அருள் பெறவேண்டுகிறோம்…