சைவம்

Butterscotch Pudding Recipe In Tamil | சுவையான… பட்டர்ஸ்காட்ச் புட்டிங்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைத்தால், பட்டர்ஸ்காட்ச் புட்டிங் செய்து கொடுங்கள். இது மாலை வேளையில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்வீட். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். நிச்சயம்
ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபியை எப்படி எளிதில் வீட்டிலேயே செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் – 1 1/2 கப்

* கடல் பாசி – 5 கிராம்

* தண்ணீர் – 1/2 கப்

* நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்

* பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் – 1/4 கப்

* பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதை வடிகட்டிவிட்டு, அந்த பாலை 3-5 நிமிடம் கொதிக்க விட்டு, ஓரளவு கெட்டியாகும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது கடல் பாசியை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரைக்க வேண்டும்.

* கடல் பாசி முழுவதும் உருகியதும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின் பிளெண்டரில் பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் போட்டு அரைத்து, அதை கொதிக்க வைத்துள்ள பாலுடன் சேர்த்து, அத்துடன் கடல் பாசியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இப்போது ஒரு ட்ரேயை எடுத்து, அதில் தயாரித்து வைத்துள்ள புட்டிங் கலவையை ஊற்றி நன்கு பரப்பி, ஒரு அலுமினியத் தாள் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் திறந்தால் சுவையான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக சுவையான… பட்டர்ஸ்காட்ச் புட்டிங் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment